Monday, January 17, 2011

A Kite’s plight

விழுகின்றேன் இதோ விழுகின்றேன் !
இறுதி நெருங்கியதை உணர்ந்து அழுகின்றேன் !


கரையும் நொடிகள் என் சிறு கையில்
கடைசி ஆசைகளின் தேர்வு சிந்தையில் !


உருவத்தில் நான் மனிதனை பிரதிபலித்ததில்லை
இருந்தும் நித்ய அன்பை மருதளித்ததில்லை !

கடற்கரைக்  காற்று எனது ஓடம் ,
அந்தரத்தில் படித்தேன் நித்தம் ஒரு பாடம் !
குழந்தைகளுக்கு நான் குதூகலமே ,
மற்றவருக்கு வெறும் காகிதமே !


இங்கு தான் என் தேவதையைக் கண்டேன் !
அவளன்பை வேண்டிக் காதல் கொண்டேன் !


பறவை போல பறக்க வைத்தாள்,
பித்தன் போல சிரிக்க வைத்தாள் !
காதல் அலையில் மூழ்கவைத்தாள்,
என் அன்பே நீயென உரைத்தாள்,
சர்வமும் சக்தியுமாய் தோன்றி நின்றாள் !


வாழ்கையும் ஒரு வட்டம் ;
உணர்த்துவது “அவன்” திட்டம் !
பறவை போல பறந்தாலும் ,
இப்போதும் நான் ஒரு பட்டம் !


காற்று எங்களை பிரித்தது,
எம் கண்களில் கண்ணீர் துளிர்த்தது !
வெண் மேகமும் என்
சோகத்தில் பங்குகொண்டான் !
கருமை பூசி கண்ணீர் விட்டான்!


பிரிவுத் துயரில் துடிக்கின்றேன் !
நான் வெற்றுக் காகிதமாய் சிதைகின்றேன் !
விழுகின்றேன் இதோ விழுகின்றேன் !
இறுதி நெருங்கியதை உணர்ந்து அழுகின்றேன் !


Note: This poem is an attempt to do a poetic translation of one of my friend's short story.
While I would like to say that this is definitely inspired by that post, this is not a line by line translation. I have tried my best here. Please post your thoughts on reading this.

No comments:

Post a Comment