நீண்ட நாட்களாக எல்லா தமிழ் சினிமா ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட எந்திரன் வெளிவந்து விட்டது. எல்லா ரஜினி ரசிகர்கள் போல நானும், First day-First Show பார்க்க வேண்டும் என்று ஆவலோடு 30 $ குடுத்து டிக்கெட்டுகளை வாங்கினேன். அடுத்த நாள் ஆபீசில் கலை 9 மணிக்கே மீட்டிங் இருந்தும், தலைவர் படம் என்பதால் சென்றேன். படத்தின் கதை, அதன் தயாரிப்பு செலவு, ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தார்கள் என்றெல்லாம் பல செய்திகளை அனைவரும் ஊடகங்களின் வழியாக தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதனால் அதை எல்லாம் தவிர்த்து விட்டு நேரடியாக ஏந்திரனின் விமர்சனத்துக்கு செல்கிறேன்.
படம் ஆரம்பிக்கும் போதே ரோபோ வந்து விடுகிறது. ரஜினி opening song இல்லாமல், எந்த ஒரு build-up இல்லாமல் எடுத்த உடனேயே திரையில் வந்து விடுகிறார். நிச்சயமாக இதை பார்த்தாவது மற்ற ஹீரோக்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்! சென்னையில் ஒரு research லேபில், ஒரு குட்டி ரோபோ ஒன்று ரஜினிக்கு(Dr . வசீகரன் ) அவர் காதலி ( சனா - மருத்துவ கல்லூரி மாணவி, ஐஸ்வர்யா ராய் ) அனுப்பிய ஒரு பூங்கொத்தை கொடுக்கிறது. அனால் வேளையில் மும்முரமாக இருக்கும் தலைவர், சனாவின் செல் போன் கால்களையும் தவிர்க்கிறார். இதனால் சனா எரிச்சல் அடைந்து இனி அவரை பார்கபோவதே இல்லை என்று முடிவெடுக்கிறார். ஆனால் வசீகரன் கூடிய விரைவில் ஒரு இயந்திர மனிதனை(ரோபோ) உருவாக்கி விட்டு, அதன் பிறகே தன் பெற்றோரையும் காதலியையும் பார்க்க புறப்டுகிறார். வீட்டின் கதவை திறக்கும் அவர் அம்மா, தாடியோடு இருக்கும் ரஜினியை பார்த்து,"என்னடா , லீவுலே வந்த ரிஷி மாதிரி இருக்கே ?" என்கிறார். சுஜாதாவின் வசனம் படிப்தற்கு நன்றாக இருந்தாலும், அந்த கதாபத்திரத்தில் நடித்தவர் அதை சரியாக வெளிபடுத்த வில்லையோ என்றே எண்ண வைக்கிறது! வசீகரன் அடுத்த படியாக தன் காதலி சனாவை சந்தித்து சமாதனம் செய்கிறார்; உடனே "காதல் அணுக்கள் பாடல் ஓடுகின்றது.
ரோபோ ரஜினி (சிட்டி) செய்யும் வேலைகள் எல்லாமே படம் பார்பவர்களுக்கு ஜாலி லூட்டி. டீவீயை போடுன்னு சொன்னதும் ரோபோ டீவீயை தூக்கி தரையில் போட்டு உடைப்பது நல்ல காமெடி. சிட்டியை சனா தன்னுடன் 2 நாள் தன் படிப்பிற்கு துணையாக இருக்க எடுத்து செல்கிறாள். அங்கு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் வாலிபர்களின் தொந்தரவிலிருந்தும், கோயில் ஒலிபெருக்கி தொந்தரவிலிருந்தும் சனாவை ரோபோ காப்பாற்றுகிறது. கோயில் ஒலிபெருக்கியில் இருந்து, "செல்லாத்தா , எங்க மாரியாத்தா !" என்று ஒலிக்கும் போது, சிட்டி, "Who is Chellaatha?" என்று கேட்கும் போது தியேட்டரில் சிரிப்பலை. எக்சாமிற்கு படிக்காத சனாவுக்கு copy அடிக்க உதவும் ரோபோ, "சார், menstruation , fertilization கெல்லாம் அவங்க என்ன பண்ணுவாங்க?" என்று கேட்பது தான் அல்டிமேட்.
இதற்கிடையில் ரோபோ சனாவை சில ரவுடிகளிடம் இருந்தும் காப்பாற்றுகிறது. SUN டிவி trailer களில் பார்க்கும் காட்சி அது தான் என்பது எல்லாராலும் யூகிக்க கூடிய ஒன்று தான். படத்தின் "highlight " என்றல் அது இந்த சண்டை காட்சி தான். அனல் பறக்கும் அந்த சண்டை காட்சியில் நமது சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லை என்பது தான் மறுக்க முடியாத, வருத்ததிற்குரிய விஷயம். அலெக்ஸ் மார்டின் என்ற ஒரு stunt மாஸ்டர் ரஜினிகாந்தின் முகமூடி அணிந்து போட்ட சண்டை தான் இந்த சண்டை காட்சி. அதை நீங்கள் youtube இல் கண்டு களிக்கலாம். SO, ரஜினி படம் பார்க்க வேண்டும் , தலைவரின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள், பஞ்ச்-டயலாக் இதெல்லாம் ரசிக்க வேண்டும் என்று சென்றவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
http://www.youtube.com/watch?v=zWPujmk939s
http://www.youtube.com/watch?v=Dl357wDHIJs
( லிங்க் le video கிடைக்கவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ).
வசீகரனின் இந்த ரோபோ படைப்பிற்கு AIRD யில், அந்த ரோபோ எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததால் ,மனிதர்களுக்கு அபாயகரமானதாக கருதி ஒப்புதல் அளிக்க மறுக்கபடுகிறது. இதற்கு முக்கிய காரணம், வசீகரனின் மீது பொறாமை படும் அவரது ப்ரோபெசர் Danny Denzongpa . அதன் பின்னே நடக்கும் ஒரு விபத்தின் காரணமாக வசீகரன், சிட்டிக்கு உணர்சிகளை கற்றுகொடுக்கிறார். அந்த புதிய சிட்டி ஒரு கஷ்டமான பிரசவத்தை சுக பிரசவமாக மாற்றிவிடுகிறது. இதை பாராட்ட சனா சிட்டிக்கு முத்தம் இடுகிறாள். சிட்டியான ரோபோவிற்கு காதல் பிறக்கிறது.
அதன் பின்னே நடக்கும் விஷயங்கள் தான் கதையின் பின்-பாதி. வசீகரன் அடித்து நொறுக்கிய சிட்டியை Danny எடுத்து சென்று, மீண்டும் ஒருங்கிணைத்து, அதை அழிவு மற்றும் தீவிரவாத செயல்களுக்காக உபயோகப்படுத்த முனைகிறார். ஒரு கட்டத்தில் சிட்டியே தனக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் கொண்டு தன்னை போன்ற பல ரோபோக்களை உருவாக்குகிறது. சனாவை திருமண மண்டபத்திலிருந்து கடத்தி பிணைக்கைதியாக வைத்துக்கொள்கிறது. போலீசாலும் ராணுவத்தாலும் அடக்க/ அழிக்க முடியாத சிட்டியை எப்படி அழிப்பது ? "இவ்வளவு நேரம் நம்ம மனித ரஜினி எதாவது பண்ணுவாருன்னு தானே தியேட்டர் லே உக்காந்து இருக்கறோம்"னு ரசிகர்கள் யோசிக்கற நேரத்துலே, வசீகரன் அந்த ரோபோவை எப்படி அழிக்கிறார் என்பதை ஹாலிவுட் Stan - Winston ஸ்டுடியோசின் உதவியோடு பல கோடிகளை விரயமாக்கி காட்டி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குனர் ஷங்கர், தேவை இல்லாத காட்சிகள் பல சேர்த்து இருக்கிறார். அனால் வழக்கத்திற்கு மாறாக அவை கதையோடு ஒன்றாமல் தனித்து நிற்பது தான் பெரிய மைனஸ். கிளிமாஞ்சரோ பாடலில் வரும் ரஜினிக்கும் இரும்பிலே ஒரு இருதயம் பாடலில் வரும் ரஜினியின் இளமைக்கும் உள்ள வித்தியாசம் குழந்தைகளுக்கு கூட தெரிந்து விடும். ரஜினியின் பெயரை சொல்லிக்கொண்டு எதோ ஒரு "dupe " ஐ பயன்படுத்தி எல்லாரையும் ஏமாற்றி இருக்கிறார், இயக்குனர் ஷங்கர்! "சிவாஜி" யில் பார்த்து ரசித்த ரஜினியை என்திரனில் பார்க்க முடியாது என்பது வருத்தமே. ரஜினி படத்தில் லாஜிக் இருக்காது என்ற மேலோட்டமான கருத்தினை நான் என்றுமே எற்றுகொண்டதில்லை. ஷங்கர் படங்களும் அப்படி தான். இவ்விருவரும் தனி தனியே என்னை கவர்ந்தவர்கள்; கூட்டாக தந்த "சிவாஜி" யிலும் அசத்தியவர்கள். அனால் இந்த முறை சன் டிவியின் விளம்பரங்களின் தயவினால் விளைந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எந்திரன் சறுக்கி விழுகின்றான்.
ஐஸ் பத்தி ஒன்னு சொல்லியே ஆகணும் - உலக அழகி என்கிற பட்டம் அவங்களுக்கு மட்டுமே பொருந்தும் :-)
Final appraisal :
எந்திரன் - Meets all expectations :-)
No comments:
Post a Comment