Showing posts with label rajini. Show all posts
Showing posts with label rajini. Show all posts

Sunday, October 3, 2010

Enthiran review

நீண்ட நாட்களாக எல்லா தமிழ் சினிமா ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட எந்திரன் வெளிவந்து விட்டது. எல்லா ரஜினி ரசிகர்கள் போல நானும், First day-First Show பார்க்க வேண்டும் என்று ஆவலோடு 30 $ குடுத்து டிக்கெட்டுகளை வாங்கினேன். அடுத்த நாள் ஆபீசில் கலை 9 மணிக்கே மீட்டிங் இருந்தும், தலைவர் படம் என்பதால் சென்றேன். படத்தின் கதை, அதன் தயாரிப்பு செலவு, ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தார்கள் என்றெல்லாம் பல செய்திகளை அனைவரும் ஊடகங்களின் வழியாக தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதனால் அதை எல்லாம் தவிர்த்து விட்டு நேரடியாக ஏந்திரனின் விமர்சனத்துக்கு செல்கிறேன்.


படம் ஆரம்பிக்கும் போதே ரோபோ வந்து விடுகிறது. ரஜினி opening song இல்லாமல், எந்த ஒரு build-up இல்லாமல் எடுத்த உடனேயே திரையில் வந்து விடுகிறார். நிச்சயமாக இதை பார்த்தாவது மற்ற ஹீரோக்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்! சென்னையில் ஒரு research லேபில், ஒரு குட்டி ரோபோ ஒன்று ரஜினிக்கு(Dr . வசீகரன் ) அவர் காதலி ( சனா - மருத்துவ கல்லூரி மாணவி, ஐஸ்வர்யா ராய் ) அனுப்பிய ஒரு பூங்கொத்தை கொடுக்கிறது. அனால் வேளையில் மும்முரமாக இருக்கும் தலைவர், சனாவின் செல் போன் கால்களையும் தவிர்க்கிறார். இதனால் சனா எரிச்சல் அடைந்து இனி அவரை பார்கபோவதே இல்லை என்று முடிவெடுக்கிறார். ஆனால் வசீகரன் கூடிய விரைவில் ஒரு இயந்திர மனிதனை(ரோபோ) உருவாக்கி விட்டு, அதன் பிறகே தன் பெற்றோரையும் காதலியையும் பார்க்க புறப்டுகிறார். வீட்டின் கதவை திறக்கும் அவர் அம்மா, தாடியோடு இருக்கும் ரஜினியை பார்த்து,"என்னடா , லீவுலே வந்த ரிஷி மாதிரி இருக்கே ?" என்கிறார். சுஜாதாவின் வசனம் படிப்தற்கு நன்றாக இருந்தாலும், அந்த கதாபத்திரத்தில் நடித்தவர் அதை சரியாக வெளிபடுத்த வில்லையோ என்றே எண்ண வைக்கிறது! வசீகரன் அடுத்த படியாக தன் காதலி சனாவை சந்தித்து சமாதனம் செய்கிறார்; உடனே "காதல் அணுக்கள் பாடல் ஓடுகின்றது.



ரோபோ ரஜினி (சிட்டி) செய்யும் வேலைகள் எல்லாமே படம் பார்பவர்களுக்கு ஜாலி லூட்டி. டீவீயை போடுன்னு சொன்னதும் ரோபோ டீவீயை தூக்கி தரையில் போட்டு உடைப்பது நல்ல காமெடி. சிட்டியை சனா தன்னுடன் 2 நாள் தன் படிப்பிற்கு துணையாக இருக்க எடுத்து செல்கிறாள். அங்கு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் வாலிபர்களின் தொந்தரவிலிருந்தும், கோயில் ஒலிபெருக்கி தொந்தரவிலிருந்தும் சனாவை ரோபோ காப்பாற்றுகிறது. கோயில் ஒலிபெருக்கியில் இருந்து, "செல்லாத்தா , எங்க மாரியாத்தா !" என்று ஒலிக்கும் போது, சிட்டி, "Who is Chellaatha?" என்று கேட்கும் போது தியேட்டரில் சிரிப்பலை. எக்சாமிற்கு படிக்காத சனாவுக்கு copy அடிக்க உதவும் ரோபோ, "சார், menstruation , fertilization கெல்லாம் அவங்க என்ன பண்ணுவாங்க?" என்று கேட்பது தான் அல்டிமேட்.

இதற்கிடையில் ரோபோ சனாவை சில ரவுடிகளிடம் இருந்தும் காப்பாற்றுகிறது. SUN டிவி trailer களில் பார்க்கும் காட்சி அது தான் என்பது எல்லாராலும் யூகிக்க கூடிய ஒன்று தான். படத்தின் "highlight " என்றல் அது இந்த சண்டை காட்சி தான். அனல் பறக்கும் அந்த சண்டை காட்சியில் நமது சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லை என்பது தான் மறுக்க முடியாத, வருத்ததிற்குரிய விஷயம். அலெக்ஸ் மார்டின் என்ற ஒரு stunt மாஸ்டர் ரஜினிகாந்தின் முகமூடி அணிந்து போட்ட சண்டை தான் இந்த சண்டை காட்சி. அதை நீங்கள் youtube இல் கண்டு களிக்கலாம். SO, ரஜினி படம் பார்க்க வேண்டும் , தலைவரின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள், பஞ்ச்-டயலாக் இதெல்லாம் ரசிக்க வேண்டும் என்று சென்றவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

http://www.youtube.com/watch?v=zWPujmk939s

http://www.youtube.com/watch?v=Dl357wDHIJs

( லிங்க் le video கிடைக்கவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ).

வசீகரனின் இந்த ரோபோ படைப்பிற்கு AIRD யில், அந்த ரோபோ எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததால் ,மனிதர்களுக்கு அபாயகரமானதாக கருதி ஒப்புதல் அளிக்க மறுக்கபடுகிறது. இதற்கு முக்கிய காரணம், வசீகரனின் மீது பொறாமை படும் அவரது ப்ரோபெசர் Danny Denzongpa . அதன் பின்னே நடக்கும் ஒரு விபத்தின் காரணமாக வசீகரன், சிட்டிக்கு உணர்சிகளை கற்றுகொடுக்கிறார். அந்த புதிய சிட்டி ஒரு கஷ்டமான பிரசவத்தை சுக பிரசவமாக மாற்றிவிடுகிறது. இதை பாராட்ட சனா சிட்டிக்கு முத்தம் இடுகிறாள். சிட்டியான ரோபோவிற்கு காதல் பிறக்கிறது.

அதன் பின்னே நடக்கும் விஷயங்கள் தான் கதையின் பின்-பாதி. வசீகரன் அடித்து நொறுக்கிய சிட்டியை Danny எடுத்து சென்று, மீண்டும் ஒருங்கிணைத்து, அதை அழிவு மற்றும் தீவிரவாத செயல்களுக்காக உபயோகப்படுத்த முனைகிறார். ஒரு கட்டத்தில் சிட்டியே தனக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் கொண்டு தன்னை போன்ற பல ரோபோக்களை உருவாக்குகிறது. சனாவை திருமண மண்டபத்திலிருந்து கடத்தி பிணைக்கைதியாக வைத்துக்கொள்கிறது. போலீசாலும் ராணுவத்தாலும் அடக்க/ அழிக்க முடியாத சிட்டியை எப்படி அழிப்பது ? "இவ்வளவு நேரம் நம்ம மனித ரஜினி எதாவது பண்ணுவாருன்னு தானே தியேட்டர் லே உக்காந்து இருக்கறோம்"னு ரசிகர்கள் யோசிக்கற நேரத்துலே, வசீகரன் அந்த ரோபோவை எப்படி அழிக்கிறார் என்பதை ஹாலிவுட் Stan - Winston ஸ்டுடியோசின் உதவியோடு பல கோடிகளை விரயமாக்கி காட்டி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.




பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குனர் ஷங்கர், தேவை இல்லாத காட்சிகள் பல சேர்த்து இருக்கிறார். அனால் வழக்கத்திற்கு மாறாக அவை கதையோடு ஒன்றாமல் தனித்து நிற்பது தான் பெரிய மைனஸ். கிளிமாஞ்சரோ பாடலில் வரும் ரஜினிக்கும் இரும்பிலே ஒரு இருதயம் பாடலில் வரும் ரஜினியின் இளமைக்கும் உள்ள வித்தியாசம் குழந்தைகளுக்கு கூட தெரிந்து விடும். ரஜினியின் பெயரை சொல்லிக்கொண்டு எதோ ஒரு "dupe " ஐ பயன்படுத்தி எல்லாரையும் ஏமாற்றி இருக்கிறார், இயக்குனர் ஷங்கர்! "சிவாஜி" யில் பார்த்து ரசித்த ரஜினியை என்திரனில் பார்க்க முடியாது என்பது வருத்தமே. ரஜினி படத்தில் லாஜிக் இருக்காது என்ற மேலோட்டமான கருத்தினை நான் என்றுமே எற்றுகொண்டதில்லை. ஷங்கர் படங்களும் அப்படி தான். இவ்விருவரும் தனி தனியே என்னை கவர்ந்தவர்கள்; கூட்டாக தந்த "சிவாஜி" யிலும் அசத்தியவர்கள். அனால் இந்த முறை சன் டிவியின் விளம்பரங்களின் தயவினால் விளைந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எந்திரன் சறுக்கி விழுகின்றான்.

ஐஸ் பத்தி ஒன்னு சொல்லியே ஆகணும் - உலக அழகி என்கிற பட்டம் அவங்களுக்கு மட்டுமே பொருந்தும் :-)

Final appraisal :
எந்திரன் - Meets all expectations :-)

Sunday, August 8, 2010

Endhiran Lyrics

நாம ஸ்கூல் இல்ல காலேஜிலே படிக்கும் போது ரெண்டு ரூபா இல்ல மூணு ரூபாய்க்கு பாட்டு புத்தகங்களை வாங்கி இருப்போம் ..அதுலே நிறைய பிழைகள் இருக்கும். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் ரெண்டு ரூபாய்க்கு இது போதும் என்பாங்க. இல்லைனா ரொம்ப எதிர்பார்க்க கூடாதுன்னு சொல்வாங்க... அப்பறம் எதுக்காக அந்த பாடு புத்தகத்தை வாங்கனும்னு நான் கேப்பேன் .
எந்திரன் படத்து பாட்டெல்லாம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாள் ஆனாலும் , பாடல் வரிகள் சரியாய் யாருக்கும் கிடைச்சிருக்க வாய்ப்பு இருந்திருக்காது .
இன்டர்நெட்டில் தேடி கிடைத்த சில பதிவுகளில் தப்பான சில வார்த்தைகள் இருந்ததாலே சரியான வரிகளை தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் blogger  களுக்காக கீழ் கண்ட இந்த பதிவுகள்.


Kilimanjaaro lyrics

Irumbile oru irudhayam

Kaadhal anukkal

Puthiya manitha

Kilimanjaaro - my favourite ;)

Lyrics: பா. விஜய்
Singers: Javed Ali, Chinmayi



Javed Ali:
கிளிமாஞ்சாரோ மலைக்
கனிமாஞ்சாரோ கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ
ஆஹா ஆஹா

மொகஞ்சதாரோ உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ
யாரோ யாரோ?
ஆஹா ஆஹா!!

Chinmayi:
காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தாலே வேக வெச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா
ஆஹா ஆஹா!

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டிய புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்னை
சூப்பு வெச்சு குடிய்யா
ஆஹா ஆஹா!


Javed Ali:
ஏவாளுக்கு தங்கச்சியே
என்கூடத்தான் இருக்கா
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா ?

அக்கக்கோ -அடி கின்னிகொழி
அப்பப்போ என்னை பின்னிக்கோடி!
இப்பப்போ -முத்தம் எண்ணிக்கோடி !

Chinmayi:
அக்கக்கோ -நான் கின்னிகொழி
அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ !
இப்பப்போ -முத்தம் எண்ணிக்கோ நீ   !

ஏக் தோ ...எண்ணிக்கோ நீ   !

Javed Ali:
கொடிப்பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

Chinmayi:
அட  நூறு கோடி தசை
ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை

Javed Ali:
இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனசே ரெண்டா மடிச்சிக்கேரே


Chinmayi:
நான் ஊறவைத்தக்கனி
என்னை மெல்ல ஆற வைத்துக்கடி

Javed Ali:
வேர் வரை நுழையும்
வெயிலும் நான்
நீ இலைத்திரை ஏன் இட்டாய் ?



Chinmayi:
உதட்டையும் உதட்டையும்
பூட்டிக்கொண்டு
யுகம் முடித்து திற அன்பா

Javed Ali:
அக்கக்கோ -அடி கின்னிகொழி
அப்பப்போ என்னை பின்னிக்கோடி!
இப்பப்போ -முத்தம் எண்ணிக்கோடி !

Chinmayi:
அக்கக்கோ -நான் கின்னிகொழி
அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ !
இப்பப்போ-முத்தம் எண்ணிக்கோ நீ   !
ஏக் தோ ...எண்ணிக்கோ நீ   !

சுனை வாசியே சுக வாசியே
தொல்கருவி எனைவாசியே

Javed Ali:
தொல்குத்தாத பலா
றெக்க கட்டி
கால் கொண்டாடும் நிலா

Chinmayi:
மரதேகம் நான் -மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில் வாசம் நீ

Javed Ali:
நூறு கிராம் தான் இடை
உனக்கு இனி யாரு நான் தான் உடை

Chinmayi:
ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி
என்னை மேய்ந்து விடு மொத்தம்

Javed Ali:
பச்சை பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம் ?

Pallavi continues....

Irumbile oru Idhayam

Lyrics: Kaargi
Singers: AR Rahman, Kash & Krissy

KnK:
You wanna feel my kiss
Bro you cant touch this!
Robotic Hypnotic Hypnotic Supersonic
Superstar come come get it
Superstar come come get it!



ARR:
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ ?
முதல் முறை காதல் அழைக்குதோ?
பூஜ்யம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு .
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
Google கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

iRobo உன்காதில்

I Love You சொல்லட்டா?



I am a supergirl 
உன்காதல் rapper girl !

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன்நீல கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலபல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் engine நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

Watch me robo shake it

I know you want to break it
தொட்டுப்பேசும் போதும்
ஷாக் அடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்
motor வேகம் கூடும்
இரவில் நடுவில் battery தான் தீரும்!



மெமரியில் குமரியை
தனிச்சிறை பிடித்தேன்
shutdown யே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சாரெல்லாம் தேய தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்!

எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா?
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா?
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி !
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி !
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண் மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே !

ஹே ரோபோ மயக்காதே!
You wanna come & get it boy
Oh are just a robo toy
I dont want to break you 

Even if it takes to
Kind of like a breakthrough

U dont even need a clue
U be my man's back up
I think you need a checkup
I can melt your heart down
May be if u got one

We are doing that for ages
Since the time of sages




முட்டாதே ஓரம்போ
நீ என் காலைச்சுத்தும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவை இல்லை போ போ

Kaadhal Anukkal


Lyrics : வைரமுத்து
Singers : விஜய் பிரகாஷ், Shreya Ghosal

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை ?
நியுட்ரான் எலக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
ஹையோ
சதா சதா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா ?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா?


நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜா பூவில் ரத்தம்


ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்சாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி !



பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களை கொண்டு தான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களை கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜென் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
அசைகள் மிக அதிகம் !

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே நொடியில்
செய்வோம் பெண்ணே வா வா

காதல்காரா !காதல்காரா !
நேசம் வளர்க்க
ஒரு நேரம் ஒதுக்கு
எந்தன் நெஞ்சம் வீங்கிவிட்டதே !

காதல்காரி காதல்காரி
உந்தன் இடையைப்போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே !

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை ?
நியுட்ரான் எலக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை ?
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை அன்பே


சதா சதா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா ?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா?



ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்சாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி !

Puthiya manitha - song lyrics

Lyrics: Vairamuthu
Singer; SP Balasubramaniam

Enthiran

(robo SPB)
புதிய மனிதா
பூமிக்கு வா

(robo)
எஃகை வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட் டிஸ்கினில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

(Khatija)
மாற்றம் கொண்டுவா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று

எல்லா உயிருக்கும்
நன்மையாய் இரு
எந்த நிலையிலும்
உண்மையாய் இரு

(SPB)
எந்திரா...எந்திரா..
என் எந்திரா!
நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ கற்றது நூறு மொழி
ஈரல் கலையும் துன்பமில்லை
இதயக்கோளாறு ஏதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லா மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன்
இவன் அமரன்
இதோ என் எந்திரன்
இவன் அமரன்


நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண்மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

(chorus - twice)
புதிய மனிதா
பூமிக்கு வா

(SPB)
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞானஒளி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ
பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா !
ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா !

(robo SPB)
புதிய மனிதா
பூமிக்கு வா