Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Thursday, April 12, 2012

காதல் 2

கன்னியின் உறவில்
கண்ணி என்றறியாமல்
வெடித்துச் சிதறிய மனம்

வெடித்துச் சிதறிய துகள்களை
பிசினிப் போல் சேர்த்தாள் புதியவள்

காமன் செய்த‌ விளையாட்டில்
குரங்குப் பட்டம் பெற்றது மனம்

எய்தவனிருக்க அம்பை நோவதேனோ?

கிறுக்கல்கள், இது புதுசு கண்ணா புதுசு ;)

Again, these are some "poems"/"kavithai" (mokkais) I wrote way back in Nov 19,2009. Posted on my company blog. Just reposting it to my personal blog now.


இவன் உன்னால் ஆன கலைஞன்
இன்று பிறந்த புது கவிஞன்
சிற்றின்பமும் எனக்கு பேரின்பமே
எங்கும் தெரிவது உன்முகமே

*******************************************
நங்கையின் கண்களில் கைதாகி
காதல் சிறையில் உழலும் மனம்,
விரும்பும் தண்டனை திருமணம் !

********************************************
அனுபவங்களில் பாக்கள் தேடினேன்,
நான் கண்ணதாசன் !
சொற்களில் இசையைத் தேடினேன்,
நான் விசுவநாதன் !
தோழி உன்னில் காதல் தேடுகின்றேன்
நான் உன் காதல்தாசன்!

****************************************
நவம்பர் மாத குளிரிலும்
இளவேனில் தென்றல் வீசுதே
உன் பாதம் பட்ட பனியிலும்
வசந்தம் மலர்ந்து பூக்குதே !

***********************************
ஈடேராத காதலுக்கும்
விட்டுசென்ற காதலிக்கும்
நூறு கவிதைகள் செய்தான்
தோள்கொடுத்த நண்பனுக்கும்
சிலவற்றை ஒதுக்கினான்
ஏட்டுச்சொரக்காய் கரிகாகதென மனைவிக்கு
மாத சம்பளம் முழுவதும் அளித்தான்!

துணை

ஒரு கூட்டத்திலும் உன்னை அறிந்திடுவேன்
உன் ஆசைக்கு தான் என்றும் பணிந்திடுவேன் !

உன் ஒரு விரல் தீண்டலில் சிலிர்த்தேழுவேன்
மடி கொடுத்தால் தினம் தவழ்ந்திடுவேன் !

உன் மர்மங்களை அறிந்திடுவேன்
அச்சம் வேண்டாம்… என்னில் புதைத்திடுவேன் !

உன் சின்ன இச்சைகள் கேட்டுவைப்பேன்
இன்பம் களிக்கும் நேரத்தை நிறுத்திவைப்பேன் !

உன் நாட்களை நான் வகுத்திடுவேன்
ஒவ்வொரு வகையிலும் துணை இருப்பேன் !

அன்பே தினமும் என்னை கவனி !
நான் குற்றேவல் புரியும் உன் கணினி !

Appada, oru vazhiya computerkum oru kavithai eluthiyaachu … Ithai padichu tension aanarvagaluku yen varuthathai therivithu kolgiren ;)

Jus like that

ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
பத்து பதினொன்னு பன்னெண்டு பதிமூணு
எழுதிட்டேன் பாரு நானும் புதுகவிதை !


நாலு நாலு வார்த்தை சேத்துபோட்டேன்
வைரமுத்து வரியை ஆட்டைய போட்டேன்
அடுத்தவன் ப்ளொக்லே கமெண்டை போட்டேன்
கவிதேன்னா இது தான்னு சொல்லிபோட்டேன் !


காதல்லே தான் ஆரம்பிச்சேன்.
காதலேயே நின்னுகிட்டேன் !
உருகி உருகி எழுதிடுவேன் ,
காதலை விட்டு வேற கேட்டா…
தத்து பித்துன்னு உளறிடுவேன் !
கேட்டா “கவிஞன்”னு சொல்லிடுவேன் !


சின்னவயசு பள்ளிகூட கட்டுரை,
வாரம் ஒன்னு எழுதிடுவேன் .
நெட்டுலே “கவிஞன்”னு சொல்லனும்னு ,
நாலு நாலு வார்த்தையா பிரிச்சி போட்டுடுவேன்

Saturday, August 13, 2011

ஏமாற்றம்

காதல் என்னும் போதை தான்
தெளிந்துவிட்டால் வெறுமை தான் !
கண்பட்ட அழகும் என் ரசனை தான் !!!
பின் சுக்குநூறாய் உடைத்தெறிந்தாய் ...
மனதில் மிஞ்சியது வேதனை தான் !!!

விரல் பற்றி நடக்கும் பிள்ளை போல ,
உன்விழி பற்றியே நடந்தேனே !
மரம் பற்றிய கொடிபோல ,
உன் அன்பைபற்றியே படர்ந்தேனே !
இன்று இருள்காட்டிலே தொலைந்தேனே !!!

கவிதைகள் உண்டு பல்லாயிரம் ,
இன்னும் கற்பனை வளர்ப்பார் ஆயிரம் !
மண்ணில் மற்றவர் இனிதே வாழ்ந்திருக்க ,
நான் மட்டும் தனிமையில் தவிப்பதேனோ ???

மதியிழந்திருந்தேனோ
அந்த மயக்கும் பொழுதுகளில் ???
உன் நினைவிழந்திருப்பேனோ ....
இனி வரும் மாலைகளில் ???
நாவினால் சுட்ட வடுவும்
ஆறிவிடும் என்கண்ணே ,
உன் காதலினால் சுட்ட வடு ஆறாதே !!

Thursday, August 26, 2010

நிதர்சனம்

சென்ற தேர்தலின் அறிக்கை
காற்றிலே பறந்தது தெரிந்தும்
கறி சாராயம் மற்றும்
ஒரு மாத செலவுப்பணத்தில்
மதியிழந்து வாக்களிக்கும்
வாக்காளன் நிதர்சனமே !

பகுத்தறிவு பேசி
சுய அறிவை இழந்ததும்
வெள்ளையர்களை வெளியேற்றி
கொள்ளையர்களை மேலேற்றியதும்
நிதர்சனமே !

ஒன்று கூடி சுதந்திரம்
அடைந்தவர் இன்று
ஒற்றுமையில் வேற்றுமை
காண்பதும் நிதர்சனமே !

வந்தாரை வாழ வைத்த
தமிழர் இன்று காலூன்ற
இடமின்றி நாடு நாடாய் பிச்சை
கேட்டுக் கொண்டிருப்பதும்
நிதர்சனமே !