Showing posts with label reality. Show all posts
Showing posts with label reality. Show all posts

Thursday, August 26, 2010

நிதர்சனம்

சென்ற தேர்தலின் அறிக்கை
காற்றிலே பறந்தது தெரிந்தும்
கறி சாராயம் மற்றும்
ஒரு மாத செலவுப்பணத்தில்
மதியிழந்து வாக்களிக்கும்
வாக்காளன் நிதர்சனமே !

பகுத்தறிவு பேசி
சுய அறிவை இழந்ததும்
வெள்ளையர்களை வெளியேற்றி
கொள்ளையர்களை மேலேற்றியதும்
நிதர்சனமே !

ஒன்று கூடி சுதந்திரம்
அடைந்தவர் இன்று
ஒற்றுமையில் வேற்றுமை
காண்பதும் நிதர்சனமே !

வந்தாரை வாழ வைத்த
தமிழர் இன்று காலூன்ற
இடமின்றி நாடு நாடாய் பிச்சை
கேட்டுக் கொண்டிருப்பதும்
நிதர்சனமே !